வலியால் துடித்த கர்ப்பிணி - அரசு பேருந்தில் பிறந்த குழந்தை!

 
fff

மருத்துவமனைக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், பேருந்திலேயே பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

fff

கேரள மாநிலம் கொச்சி அருகே அங்கமாலியில் இருந்து மலப்புரம் செல்லும் பேருந்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. 

baby leg
கர்ப்பிணி வலியால் துடிப்பதை கண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை மருத்துவமனைக்கு திரும்பியதுடன், மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். எனினும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்வதற்குள் வலி அதிகரித்ததால் பேருந்திலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.