டீ கடை உரிமையாளர் கே.ஆர். விஜயன் மரணம் : பிரபல உலகம் சுற்றும் தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

 
ttn

உலகம் சுற்றும் வியாபாரி என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயன், உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவில் டீ கடை நடத்தும் கே.ஆர். விஜயன் - மோகனா தம்பதியை அறியாதவர்கள் யாரும் இல்லை. இவர்கள் கிட்டத்தட்ட 26 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  டீக்கடையில் கடுமையாக உழைத்து அதில் வரும் பணத்தை சேமித்து வெளிநாட்டுக்கு செல்வதை  இந்த தம்பதி வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 2019 ஆண்டு  நவம்பர் - டிசம்பர் மாதம் இவர்களைப் பற்றி அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சொந்த செலவில் இந்த தம்பதியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். 

ttn

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளாமல் இந்த தம்பதி இருந்து வந்தனர். விஜயன் - மோகனா தம்பதி இதுவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், இஸ்ரேல், ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளையும் சுற்றிப் பார்த்திருக்கின்றனர்.

ttn

இந்நிலையில் கேரள மாநிலத்தின் கொச்சியை சேர்ந்த டீ கடை உரிமையாளரான கே.ஆர்.விஜயா மாரடைப்பால் இன்று காலமானார் . அவருக்கு வயது 71. உலகம் சுற்றும் தம்பதி என்று அழைக்கப்படும் இவர்கள் 14 ஆண்டுகளில் 26 நாடுகளுக்கு சென்றுள்ளனர்.