பெண் அமைச்சர் மீது தாக்குதல்! மருத்துவமனையில் அனுமதி
கேரளாவில் பெண் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பினராய்.

கேரளாவில் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு எதிராக இரிக்கூர், பைய்யாவூர், தலசேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். கேரள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் போது அலட்சியம் காட்டுவதை கண்டித்து இந்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது. அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார்.

ரயிலில் ஏற முயன்ற நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞர் காங்கிரசார் கறுப்பு கொடிகளை பிடித்தபடி எதிர்ப்பு முழக்கமிட்ட போராட்டகாரர்களில் சிலர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கை கலப்பும் உண்டாக, வீணா ஜார்ஜ் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.nபாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், அமைச்சர் வீணா ஜார்ஜை போராட்டகாரர்களிடம் இருந்து மீட்டு,கண்ணூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அமைச்சர் மீதான தாக்குதலை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சரிடம் நலம் விசாரித்தார்.

