ஓணம் கொண்டாட்டம்- நடனமாடிய அரசு ஊழியர் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

 
s

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தின்போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வயநாடு சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ் அப்துல்லா (46), இவர் உதவி நூலகராக பணிபுரிந்தார். முன்பு முன்னாள் எம்எல்ஏ பி.வி. அன்வரின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றியவர்

திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் ஜூனைஸ், சக ஊழியர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.