'கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் நிறைவேற்றம்!

 
t

'கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

tt

 ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மலையாள மொழிக்கேற்ப மாநிலத்தில் பெயர் மாற்றப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

gg

கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானத்தில்,  மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.