டிரான்ஸ்பார்மர் மீது மோதிய ஆம்புலன்ஸ்...உடல் கருகி உயிரிழந்த நோயாளி

 
accident

கேரள மாநிலம் கோழிக்கோடு நகர் பகுதியில் கன மழை காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வேன் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் நோயாளி உயிரிழந்தார்.

World News: Female patient burned to death after ambulance hits electric  pole in Kerala

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரம் என்ற பகுதியில் இருந்து சுலோச்சனா என்ற நோயாளியை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் இரண்டரை மணி அளவில் கோழிக்கோடு நகர் பகுதியில் ஆம்புலன்ஸ் வேன் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி தீப்பிடித்து உள்ளது. இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி சுலோச்சனா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்புலன்ஸில் இருந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Patient charred to death as ambulance catches fire in Kerala

கன மழை காரணமாக ஆம்புலன்ஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.