ஜாமினை நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு

 
arvind kejriwal

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர்,  மே 10ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். 

 

Arvind kejriwal

இந்நிலையில்  மருத்துவ காரணங்களால் ஜாமின் நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  

supreme court

தேர்தல் காரணமாக ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளதால் ஜாமினை நீட்டிக்க வேண்டுமென கெஜ்ரிவால் கோரிக்கை 7 நாட்களுக்கு ஜாமினை நீட்டிக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.