கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ள திட்டம்.. கே.சி. வேணுகோபால்

 
கே.சி.வேணுகோபால்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தால் கர்நாடகாவில் நல்ல பலன்களை கண்டுள்ளோம். தற்போது கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை திட்டமிடுகிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியருவமான கே.சி. வேணுகோபால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  சித்தாந்த வேறுபாடுகள் அல்லது சில மாநிலங்களில் போட்டியாளராக இருந்தாலும்,  மற்ற பிராந்திய கட்சிகளுடன்  தேர்தலுக்கு பிந்தைய  கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி உடன் நாங்கள் கூட்டணி வைக்க முடியாது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆனால் நாங்கள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியையும் சில சமயங்களில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையும் வைத்திருக்க முடியும். கர்நாடக முதல்வர் என்பதை முடிவு செய்ய சிறிது நேரம் எடுக்கும். அதை டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா இடையே தீர்த்து வைப்போம். அவர்கள் இருவருமே இதயத்தில் காங்கிரஸ்காரர்கள். நாங்கள் ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையிலான பிரச்சினை மற்றும் பிற மாநிலங்களில் உள்ள உட்கட்சி பிரச்சினைகளை சரி செய்வோம். 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை (தெற்கிலிருந்து வடக்கு) நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தால், கர்நாடகாவில் நாங்கள் (கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றி) நல்ல பலன்களை கண்டுள்ளோம். தற்போது கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை திட்டமிடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.