#KarnatakaElection பாஜக பின்னடைவு - அமித்ஷா ஆலோசனை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் , காங்கிரஸ் சுமார் 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது . பாஜக 71 தொகுதிகளிலும் ,மதசார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை வகுத்து வரும் நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக அதை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் கர்நாடக தலைமை பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அத்துடன் மதசார்பற்ற ஜனதா தளம் குமாரசாமி தரப்பை பாஜக அணுக முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.