காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்து இருக்கு, மின் கட்டணம் கேட்டு இங்கே வராதீர்கள்.. கட்டணம் செலுத்த மறுக்கும் கர்நாடக கிராம மக்கள்

 
மின்சார ரீடிங் மீட்டர்

வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளதால், நாங்கள் மின் கட்டணம் செலுத்த மாட்டோம், மின் கட்டணம் இங்கே வராதீர்கள் என்று மின்சார துணை பணியாளர்களிடம் கர்நாடக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் கொப்பல், கலபுர்கி, சித்ரதுர்கா போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்ததாக தகவல். மின்வாரிய அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்யும் போது இது நடந்தது. 

டி.கே. சிவகுமார், சித்தராமையா

சித்ரதுர்காவில் ஒரு பெண்ணிடம் மீட்டர் ரீடர் மின் கட்டணத்துக்கான பில்லைகொடுத்த போது, அந்த பெண் மின் கட்டணத்தை செலுத்த மறுத்ததோடு, சமீபத்திய கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸூக்கு வாக்களித்த நிமிடம் முதல் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை பெறுவதற்க மக்களுக்கு உரிமை உண்டு. சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தட்டும். தேர்தலுக்கு பிறகு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற உத்தரவாத்தை விரைவில் அமல்படுத்துவோம் என்றார்கள். அதனால் மின் கட்டணம் கேட்டு இங்கு வராதீர்கள். நாங்கள் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம். வாக்களிக்கும் போது நாங்கள் பொத்தானை அழுத்தியவுன், இந்த உத்தரவாதங்களுக்கு நாங்கள் தகுதியுடையவர்கள் என்று தெரிவித்தார். 

காங்கிரஸ்

கொப்பளத்தை சேர்ந்த இன்னொருவர் கூறுகையில், மின்சாரம் கட்டணம் கட்ட மாட்டோம். எதுவாக இருந்தாலும் எங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் முதல்வர் இல்லையென்றாலும் என்று தெரிவித்தார். கிராம மக்களின் இந்த நடவடிக்கை, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நெருக்கடியை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.