ஏரியில் செல்பி எடுக்கும்போது விபரீதம்- இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

 
s

துமகூரு மாவட்டம் மை டாலா ஏரியில் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து பாறை இடுக்கில் 12 மணி நேரமாக சிக்கிக் கொண்டிருந்த 19 வயதான இளம்பெண் மீட்கப்பட்டார்.

Karnataka Shocker: 19-Year-Old-Girl Rescued After 12-Hours; After Getting Trapped While Taking Selfie (Watch Video) | Karnataka Shocker: 19-Year-Old-Girl Rescued After 12-Hours; After Getting Trapped While Taking Selfie (Watch Video)

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏரிக்கு சென்று அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து வந்தனர். துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சா நேற்று விடுமுறை என்பதால் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். பல பாறைகளுக்கு இடையே நின்று இளம் பெண் நேற்று மாலை நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி ஏறியின் கீழே விழுந்து பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார். 

உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்க நிலையில் நேற்று இரவு முதல் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மீட்க மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர மீட்பு பணி போராட்டத்திற்குப் பிறகு இன்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் பத்திரமாக மீட்டனர்.