இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை..

 
இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை..

கர்நாடக சட்டப்பேரவை இன்று கூட உள்ள நிலையில்,  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.  அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும்  நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் உள்பட  8 அமைச்சர்களும் பதவியேற்றனர்.  அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 3 நாட்களுக்கு  கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சித்தராமையா அறிவித்திருந்தார்.

இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவை..

இதையடுத்து காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று  முதலாவது சட்டப்பேரவை  கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.  வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.   9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக இருப்பார் எனவும் முதலமைச்சர்  சித்தராமையா அறிவித்துள்ளார். அதன்படி, தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையில் இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

முதல் 2 நாட்களுக்கு, அதாவது இன்று மற்றும் நாளையும்  சட்டப்பேரவை  தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து, 3-வது நாளான வருகிற 24-ந் தேதி என்று  புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.