இலவச வாக்குறுதிகள் - தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 
election commision

தேர்தலின் போது இலவச அறிவிப்புகள் இடம்பெறுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தலின் போது இலவச அறிவிப்புகள் இடம்பெறுவதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

court

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் அதன் ஆட்சேபத்தை பதிவு செய்யுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் விதிகளை மீறி, உத்தரவாதங்களை பயன்படுத்தி வாக்காளர்களை கவர்ந்து இழுப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.