கர்நாடகாவில் நாளை 182 எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு

 
karnat

காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்த பிறகு இன்று கூடிய முதல் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் 182 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். 

How the Karnataka Assembly came into being | Deccan Herald

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் இன்று முதல் நாள் சட்டமன்ற கூட்டத் தொடர் கூடியது. இந்த முதல் நாள் கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற உறுப்பினர்களில் இன்று காங்கிரஸ் பாஜக மதசார்பற்ற ஜனதா தளம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 182 பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

கூட்டத்தொடர் துவங்கி உடன் முதன்மையாக முதல்வர் சித்தராமையா இரண்டாவதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் பதவி பிரமாணம் செய்து கொண்ட நிலையில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை என பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். மீதமுள்ள 42 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். நாளை மதியத்திற்குல் மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு முடிந்த பிறகு சட்டபேரவை செயலாளர் எம் கே விசாலாட்சி இடம் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார். 

பின்பு சட்டபேரவை புதன் கிழமைக்கு ஒத்தி வைக்கப்படும்‌. புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலமாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு சட்டமன்ற கூட்டத் தொடர் மறு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும்‌‌. வரவிருக்கும் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அறிவிப்பு வெளியாகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசு சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது‌.