#JustIn கர்நாடக தேர்தல் - அதிகாரப்பூர்வ முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது .
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் இதுவரை 140 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாஜக 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் 74 தொகுதிகளிலும் ,மதசார்பற்ற ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
#KarnatakaElections | Congress leading in 74 Assembly constituencies, BJP leading in 45, JD(S)- 16 , as per EC pic.twitter.com/9tjjPCoRG1
— ANI (@ANI) May 13, 2023
#KarnatakaElections | Congress leading in 74 Assembly constituencies, BJP leading in 45, JD(S)- 16 , as per EC pic.twitter.com/9tjjPCoRG1
— ANI (@ANI) May 13, 2023
வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 117-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான பாஜக 84 இடங்களிலும் மதசார்பற்ற , ஜனதா தளம் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன . இதன் மூலம் கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.