கர்நாடகா தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை ; மகுடத்தை சூட போவது யார்?

 
tn

கர்நாடக சட்டமன்ற தேர்தல்  நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.  கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்த நிலையில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

Karnataka Elections 2023

குறிப்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 ,மதசார்பற்ற ஜனதா தளம் 27,  ஆம் ஆத்மி 217 ,பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களம் இறங்கின. அத்துடன் 918 சுயேட்சைகள் உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டனர். அந்த வகையில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் சுமூகமான நிலையில் நடைபெற்ற நிலையில் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வந்தன.

Karnataka

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்காக 36 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு நகரில் 5 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.