150 முறை ஃபோன் செய்தும் எடுக்காததால் மனைவியை கொலை செய்த கொடூர கணவர்
150 முறை ஃபோன் செய்தும் எடுக்காததால் கடுப்பாகி 230 கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பயணித்து, மாமியார் வீட்டில் இருந்த மனைவியை கொன்ற காவலர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடக மாநிலம் ஹோசக்கொட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சாமராஜநகரை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் கிஷோர். 32 வயதான இவருக்கும், ஹோஸ்கோட் பகுதியை சேர்ந்த பிரதீபா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி கடந்த 11 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பிரதீபா தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பிரதீபா மீது சந்தேகமடைந்த கிஷோர், 150 முறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்காததால் 230 கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பயணித்து, மாமியார் வீட்டில் இருந்த பிரதீபாவை கழுத்தை நெரித்து கொன்றார். கொலை செய்வதற்கு முன், கிஷோர் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கிஷோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் காவலில் வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பிரதீபாவின் உறவினர் கூறுகையில், பிரதீபா மீது சந்தேகமடைந்ண் கிஷோ, அடிக்கடி அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததாகவும், பிரதீபா, அவருடன் கல்லூரியில் படித்த 2 ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தததாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.