இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

 
Mallikarjuna Kharge

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது.

tn

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா,  அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக டெல்லியில் மூத்த அரசியல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நாளை மறுதினம் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நடத்தி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் , துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

karnataka election congress

இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சராக சித்தராமையாவும் , துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எனவும் மே 20 ஆம் தேதி பெங்களூருவில் பதவி ஏற்பு விழா நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.