கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்பு

 
tn

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கிறது.  முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி. கே. சிவகுமாரும் இன்று பதவி ஏற்று கொள்கின்றனர்.

karnataka

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.  135 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் சார்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வாகியுள்ளார்.  அதேபோல் துணை முதல்வராக கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வாகியுள்ளார். பெங்களூருவில் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

karnataka election congress

இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே,  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள வருகின்றனர். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூர் சென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது