“இயற்கை யாருக்கும் சொந்தமானது; தண்ணீரை திறக்கலனா வெள்ளத்தில் அடித்து செல்வோம்”- சிவக்குமார் திடீர் மனமாற்றம்
கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி, முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கே ஆர் எஸ் அணை, கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தால் இயற்கையே நம்மை அழித்து விடும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இதேபோன்று நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தால் கர்நாடகா அணைகள் முழுவதுமாக நிரம்பி அணையை அடித்து நொறுக்கப்பட்டு மொத்த கர்நாடக மக்களும் வெள்ளத்தில் தத்தளிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது அதன் போக்கில் தான் நாம் செல்ல வேண்டும், எனவே தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு எதிராக கர்நாடகாவில் ஆக.13ல் நடைபெறும் முழு கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கர்நாடக அமைப்பிற்கும் பாஜகவிற்கும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

