"CM விஜயை வரவேற்க காத்திருக்கிறேன்; ஆனால் தண்ணீர் திறக்க முடியாது"- டி.கே. சிவக்குமார்

 
"CM விஜயை வரவேற்க காத்திருக்கிறேன்; ஆனால் தண்ணீர் திறக்க முடியாது"- டி.கே. சிவக்குமார்

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யவுள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜயிடம் தொலைப்பேசியில் பேசினேன். காவிரி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக தெரிவித்தார். மேகதாது உள்பட கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட அவரை அழைத்துள்ளேன். முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. அவருக்கு விளக்கமளிக்க வழக்கறிஞர்களும், அதிகாரிகள் குழுவும் தயாராக உள்ளனர். கா்நாடகா வரும் தமிழ்நாடு முதலமைச்சா் விஜயை மிகுந்த கௌரவத்துடன் வரவேற்க காத்திருக்கிறேன். அவரிடம் கர்நாடகாவின் தற்போதைய நிலை குறித்து விளக்குவேன்.
.

கர்நாடக எல்லைக்குள் மேகதாதுவில் அணை கட்ட மற்ற மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இதை எதிர்க்கும் உரிமையும் இல்லை. இதே கருத்தை ராஜ்யசபாவிலும் மத்திய அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக கர்நாடக மக்களின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.