ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைகோரினார் சித்தராமையா

 
Karnataka CM designate Siddaramaiah met Governor

கர்நாடகாவில் ஆட்சிமையக்க ஆளுநரை சந்தித்து சித்தராமையா உரிமை கோரினார். 

பெங்களூருவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார். அவருடன் டி.கே.சிவக்குமாரும் உடன் சென்றார். வரும் சனிக்கிழமை அன்று கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா( 75) இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். 


 

மே 20-ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவில்,ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.