கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் வழங்க அரசு திட்டம்.. முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்

 
வீடுகளுக்கு இலவச மின்சாரம்

கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அம்மாநில மின்வாரியத்தின் 53வது நிறுவன தின விழாவை நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில் கூறியதாவது: மின்சாரம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். மின் இணைப்பு இல்லாமல் வாழ்க்கை சாத்தியமற்றது. குடிநீர் சப்ளை போல் மின்சாரம் வழங்குவது அரசின் கடமை. 

பசவராஜ் பொம்மை

இது (மின்சாரம் பெறுவது) குடிமக்களின் உரிமை. அனைவருக்கும் மின்சாரம் வழங்க மாநில அரசு உத்தேசித்துள்ளது. இது தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஷராவதி அனல்மின் நிலையத்தில் ஆற்றல் (மின்) சேமிப்பு அலகுகளை நிறுவன ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஆற்றல் சேமிப்பு அலகுகளை அமைக்க தனியார் துறையை அனுமதிக்கும் கொள்கை உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அடுத்தடுத்து தீ பிடிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட OLA நிறுவனம் ..

இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை மின்சார வாகனங்களின் முக்கிய பாகங்கள். அவை ஆத்ம நிர்பார் திட்டத்தின்கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது பெருமைக்குரிய விஷயம். மின்சார வாகனங்களின் விலை சாமானியர்களுக்கு கட்டுப்படியாக வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பை காண முடியும். உற்பத்தியாளர்கள் இந்த அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.