எதிர்க்கட்சிகள் மீது ஆளுநர் எனும் புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்- கனிமொழி எம்பி

 
கனிமொழி

தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு பற்றி ஒன்றிய அரசு எந்தவித கருத்தும் தெரிவிக்காதது ஏன்?  என  கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் இரும்பு பயன்பாடு இருந்தது என்ற ஆய்வு முடிவு குறித்து, மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? கும்பமேளா கூட்ட நெரிசலில் எத்தனை பேர் சிக்கி உயிரிழந்தார்கள் என்பது கூட தெரியவில்லை கும்பமேளா நெரிசல் குறித்து விவாதம் நடத்தவும் ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை மதமும் அரசியலும் கலக்கப்படும்போது அப்பாவி மக்கள்தான் துயரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த IT, CBI மற்றும் ED ஆகியவற்றை பயன்படுத்தி வந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தற்போது ஆளுநர் எனும் புதிய ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறது.  தற்போது மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. கும்பமேளாவில் மக்களைப் பாதுகாக்கத் தவறியவர்கள் அவையில் ஆளுநரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.


நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை, மிரட்டப்படுகின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போலீசார் அதனை பார்த்து சிலை போல நிற்கிறார்கள். சில மாநிலங்களில் அதிகாரிகளே இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன.அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் 'Anti Indian' என்கிறார்கள்.இது இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சேவை செய்யும் நிதியின் கழுத்தை நெரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.மொத்த மக்கள் தொகையில் சுமார் 11.74% ஆக இருக்கும் கிறிஸ்தவ சமூகம் இந்தியாவில் உள்ள அனைத்து சிறுபான்மை பள்ளிகளையும் 72 சதவீதம் நடத்துகிறது.கிராமப்புறங்களில் 5000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன, ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கு உதவுவதை நீங்கள் விரும்பவில்லை; கிறிஸ்தவ அமைப்பு மற்றும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளன, உத்தரப் பிரதேசம் ஹாட்ஸ்பாட்-ஆக இருக்கிறது”என்றார்.