நடிகை கங்கனா ரனாவத்தை ஓங்கி அறைந்த காவலர்! ஏர்போர்ட்டில் பரபரப்பு

 
கங்கனா

சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை, மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் பாதுகாப்பு அதிகாரி, கண்ணத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Image

பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது குல்விந்தர் கவுர் எனும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர், கங்கனா ரனாவத்தை கன்னத்தில் பளார் என அறைந்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்தற்காக பெண் காவலர் அறைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் சென்றபோது விவசாய மசோதா மற்றும் போராட்டங்கள் குறித்து பேசியதற்காக தன்னை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் தாக்கியதாக கங்கனா ரனாவத் புகார் அளித்துள்ளார். அதேநேரம் கங்கனா ரனாவத் தன்னை தாக்கியதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலரும் புகார் அளித்துள்ளார்.


கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பி செல்லும்போது விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள  கங்கனா ரனாவத் இச்சம்பவத்திற்கு பிறகு டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.