நான் பாதுகாப்பாக உள்ளேன்- கங்கனா ரனாவத்

 
கங்கனா

பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது என நடிகை கங்கனா ரனாவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எம்பியான பிறகு டெல்லி செல்ல சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த பாஜக எம்பி நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அறைந்ததாக  விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். விமான நிலையத்தில் CSIF பெண் காவலர் ஒருவர் என்னை தாக்கினார். ஏன் இவ்வாறு தாக்குகிறீர்கள் என கேட்டதற்கு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.