2019 முதல் 2023 வரை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார்.. புள்ளிவிவரத்துடன் தாக்கிய குப்தா

 
ராகுல் காந்தி

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் மவுனமாக்கப்படுகின்றன என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு 2019 முதல் 2023 வரை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார் என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.


இங்கிலாந்தின் லண்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் மவுனமாக்கப்படுகின்றன என்று மத்திய பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.

கஞ்சன் குப்தா

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக தனது மெத்தமான செயல்திறன் மற்றும் அவை நடவடிக்கைகளில் குறைந்த பங்கேற்பு ஆகியவற்றை மறைப்பதற்காக,  இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மவுனமாக்கப்பட்டன என்ற  ஆதாரமற்ற கூற்றை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகை கேரள சராசரியை விட குறைவு, தேசிய சராசரிய விட மிகக் குறைவு. வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாதபோது, நாடாளுமன்றத்தின் முழு அமர்வுகளும் நடந்துள்ளன. 

நாடாளுமன்றம்

2019 முதல் 2023 வரை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மொத்தம் 92 கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளார். இதே காலத்தில் கேரள எம்.பி.க்களின் கேள்வி சராசரி 216ஆகவும், தேசிய அளவில் எம்.பி.க்களின் கேள்வி சராசரி 163ஆக உள்ளது. இந்த தொடரில் உள்ள டேட்டா பொதுவில் கிடைக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மவுனமாக்கப்படுகின்றன, பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி இல்லை, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க முடியாது போன்ற ராகுல் காந்தியின் அப்பட்டமான பொய்களுக்கு டேட்டா (புள்ளிவிவரங்கள், தரவுகள்) ஆணி அடிக்கிறது. பள்ளியில் ஆசிரியர் மாணவனிடம் உன் வீட்டுப்பாடம் எங்கே கேட்டபோது, அந்த மாணவன் நாய் என் வீட்டுப்பாடத்தை சாப்பிட்டு விட்டது என்று அப்பட்டமான பொய் சொன்னான். அது போல் தவறான பள்ளிமாணவனை போன்றவர் ராகுல் காந்தி என பதிவு செய்துள்ளார்.