தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்

 
Kamal Haasan unveils a statue of Telugu superstar Krishna in Vijayawada

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்  நடிகர் கிருஷ்ணா  சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

Kamal Haasan unveils a statue of Telugu superstar Krishna in Vijayawada

தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா சிலையை நடிகர் கமலஹாசன் விஜயவாடாவில் திறந்து வைத்தார். இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக விஜயவாடாவில் கடந்த சில நாட்களாக படிப்பிடிப்பில் இருந்த கமல், விஜயவாடாவில் உள்ள குருநானக் காலனி கே.டி.ஜி.ஓ பூங்காவில் நடிகர் கிருஷ்ணா அவரது மகனும் தற்போதைய சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் முன்னிலையில்  சிலையை திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் விஜயவாடா கிழக்கு தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  பொறுப்பாளர் தேவிநேனி அவினாஷ், விஜயவாடா துணை மேயர் பெல்லம் துர்கா ஆகியோர் பங்கேற்றனர். 
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் கமல் தெரிவித்தார். பத்து நாட்களுக்குள் கிருஷ்ணா சிலையை அமைக்க உதவிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கிருஷ்ணாவின் குடும்பத்தினர் சார்பில் தேவிநேனி அவினாஷ் நன்றி தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிருஷ்ணா - மகேஷ் பாபு, கமல் ரசிகர்கள்  பங்கேற்றனர்.