புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி

 
tn

புதுச்சேரி நகரில் கலைஞர் அறிவாலயம் கட்டும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளார். புதுச்சேரி அரசின் நகர குழும அனுமதி கிடைத்ததும் திமுக நிர்வாகிகள் உதவியுடன் கலைஞர் அறிவாலயம் கட்டப்படும் என அமைப்பாளர் சிவா அறிவித்துள்ளார். 

புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. அப்போது  மிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவை, மாநிலம் முழுவதும் தொண்டர்களின் குடும்ப விழாவாக மக்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடவுள்ளோம். வரும் ஜூன் 3.ம் தேதி புதுச்சேரி மாவட்டத்தில் தொகுதிதோறும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திமுகவுக்குச் சொந்தமான இடத்தில் புதுச்சேரி நகர குழுமத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி மாநில திமுகவின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்போடு கலைஞர் அறிவாலயம் கட்டப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.