வீட்டில் கத்தை கத்தையாக பணம்- நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு வீட்டில் கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்துள்ளார்.

![]()
தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு வீட்டில் கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்துள்ளார். குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார். 2025 ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் தீப்பிடித்த எரிந்த நிலையில் பணக்குவியல் மீட்கப்பட்டது. கட்டுக்கட்டாக எரிந்த நிலையிலும், எரியாத நிலையிலும் சுமார் 30 கோடிக்கும் மேல் பணம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு, குழு விசாரணையில் உள்ளது. யஷ்வந்த் வர்மா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் தனியாக குழு அமைத்திருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார். தற்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நிலையில், யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.



