இலவசங்கள் வழங்க செலவு செய்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.. ஜே.பி. நட்டா

 
ஜே.பி. நட்டா

இலவசங்களை வழங்குவதற்காக செலவு செய்ததால் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.


மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த மற்றும் பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன. ஏனெனில் அந்த நாடுகள் கோவிட்-19 நோய்களின் போது இலவசங்களை வழங்குவதற்காக செலவு செய்தன. 

மோடி

நமது நாடு விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் பிற இதே போன்ற துறைகளில் செலவழிப்பதை நோக்கமாக கொண்ட ரூ.20 லட்சம் கோடி தொகுப்பை கொண்டு வந்தது. பிரதமர் மோடி போன்ற நல்ல தலைவர் இருப்பது உதவியாக இருக்கும். மகாராஷ்டிராவில் முந்தைய மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி) அரசாங்கம் முற்றிலும் ஊழல் நிறைந்தது. 

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நிர்வாகம் அனைத்து நல்ல வேலைகளையும் இடைநிறுத்தியது. ஆனால் இப்போது ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கம் (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம்) மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.