மத்திய அமைச்சராகும் ஜெ.பி.நட்டா! பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
Jun 9, 2024, 17:53 IST1717935806958
மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜெ.பி.நட்டா ராஜினாமா செய்துள்ளார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒன்றிய அமைச்சரவையில் ஜெ.பி.நட்டா இடம்பெறுகிறார். ஜெ.பி.நட்டா மத்திய அமைச்சராவதால், விரைவில் புதிய தலைவரை பாஜக தேர்வு செய்யவுள்ளது.
முன்னதாக இன்று காலை புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து அளித்தார். அதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.வெர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவ்ராஜ் சிங் சவுகான், அன்னபூர்னா தேவி, அர்ஜுன் ராம் மேவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.