முதல் நாளிலேயே பங்கு சந்தையை அலறவிட்ட ஜியோ- ரூ. 30,213 கோடி பிரமாண்ட IPO வெளியீடு

 
s

பங்குச் சந்தையில் களம் இறங்கிய வெறும் 100 நிமிடங்களில், JIO PLATFORMS-ன் அனைத்து பங்குகளும் புக் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய IPO-வாக, ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 27 கோடி பங்குகள் ரூ.30,213 கோடிக்கு பங்குச் சந்தையில் களமிறங்கிய நிலையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் குவிந்ததால் அனைத்தும் பங்குகளும் புக் செய்யப்பட்டதோடு, ரூபாயின் மதிப்பு கடந்த 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது. 

அனைத்து பங்குகளும் புக் செய்யப்பட்ட நிலையில், அக்.26 அன்று பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்.28 அன்று BSE, NSE பங்குச் சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டு வர்த்தகத்திற்கு வரவுள்ளன.