ஜார்க்கண்டில் தெருநாய் பிரச்சினைக்கு அரசால் தீர்வு காண முடியவில்லையென்றால் நாகாலாந்து மக்களை கூப்பிடுங்க.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 
30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

ஜார்க்கண்டில் தெருநாய் மக்களை கடிக்கும் பிரச்சினைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியவில்லையென்றால் நாகாலாந்து மக்களை கூப்பிடுங்க என்று முதல்வர் ஹேமந்த் சோரன் அரசை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிராஞ்சி நாராயண் வலியுறுத்தினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிராஞ்சி நாராயண் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் தெருநாய்கள் மக்களை தாக்கும் சம்பவம் அதிகமாக நிகழ்கிறது.

பிராஞ்சி நாராயண்

ராஞ்சியில் உள்ள நாய் கடி மையத்திற்கு மட்டும் தினமும் சுமார் 300 பேர் வருகின்றனர். அரசாங்கத்தால் நாய் கடி பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லையென்றால், நாகாலாந்து மக்களை அழைத்து பேசுங்கள், பிரச்சினை தீர்ந்து விடும். நாய் மற்றும் செல்லப்பிராணி பிரியர்கள் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் அவற்றை தத்தெடுக்கின்றனர். பொகாரோவில் தெருநாய்களை பிடித்து சிகிச்சை அளிப்பதற்கும், கருத்தடை செய்வதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை.

நாய்

ராஞ்சியின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ. மதுரா மஹ்தோ பேசுகையில், ஒரு மாவட்டத்தில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டாலும், அவை மற்றொரு மாவட்டத்தில் விடுவிக்கப்படுவதால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுத்த தொடங்குகின்றன. பொகாரோவில் இருந்து அழைத்து வரப்பட்ட தெருநாய்கள் தன்பாத்தில் விடப்படுகின்றன என தெரிவித்தார்.