மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் சஸ்பெண்ட்..!

 
tn

 பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. எச்.டி. ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீதும் ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.   பாலியல் புகாருக்கு உள்ளான எச்.டி.  ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ஜெர்மனி தப்பி சென்றுள்ளார். எச்.டி. ரேவண்ணா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். 

tnt

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி அறிவத்துள்ளது. பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது குறித்து விளக்கம் அளிக்க பிரஜ்வலுக்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.