ஜனவரியில் திருப்பதி செல்லும் பிளான் இருக்கா? அப்ப இது உங்களுக்கான செய்தி...

 
tirupati tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத தரிசன டிக்கெட்  ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது.

Tirupati travel guide: A quick guide to Tirupati: how to reach it, where to  stay, and what to see and do | - The Times of India

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பல்வேறு தரிசனம் மற்றும் அறை முன்பதிவு இந்த மாதம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதில்  ஜனவரி மாதம் அங்கபிரதட்சணம் செய்வதற்கான  டோக்கன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இந்த  டோக்கன்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு வரை பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  அக்டோபர் 21 முதல் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தியவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில்  வெளியிடும். இதே சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல்  இந்த டிக்கெட் மூலம் மூலவர்  தரிசனம் செய்வதற்கான விர்சூவல் சேவைக்கு 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை வழங்கி ரூ 500 வி.ஐ.பி.  தரிசன டிக்கெட் பெற 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். ரூ,300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்  25ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற  25 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள்  மற்றும் அறைகள்  https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.