மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் திவ்யா தேர்தலில் வெற்றி

 
s

ஆந்திரா மாநிலம் மண்டல பரிஷத் (MPTC) தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் திவ்யா (28) 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆந்திரா மாநிலம் மண்டல பரிஷத் (MPTC) தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் திவ்யா (28) 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவரபள்ளி மண்டலத்தின் தாமந்துனிகிடேம் தொகுதியின் தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியை கொண்டாட வேட்பாளர் திவ்யா இல்லாததாது ஜனசேனா கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

நவம்பர் 6 ஆம் தேதி  திவ்யாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்றுவந்த திவ்யா மாரடைப்பு காரணமாக உயிரிந்தார்.