ஆந்திராவில் எதிர்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?!

 
ee

ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது  தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி.  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில்  சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.  தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும்,  ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Chandrababu Naidu

 அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை தோல்வியடைய செய்து,  மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.