சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு மனநிலை சரியில்லை. அவருக்கு நல்ல சிகிச்சை அளியுங்க அகிலேஷ் ஜி.. உ.பி. அமைச்சர் தாக்கு

 
ஜெய்வீர் சிங்

சுவாமி பிரசாத் மவுரியாவின் மனநிலை சரியில்லை. அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அகிலேஷ் ஜிக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, மாநிலத்தில் இதிகாசமான ராமாயணத்தின் ஐந்தாவது காண்டமான சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா கடுமையாக விமர்சனம் செய்து இருந்தாா. இது தொடர்பாக சுவாமி பிரசாத் மவுரியா டிவிட்டரில், சுந்தரகாண்டம் பாராயண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் 97 சதவீத இந்து மக்களின் உணர்வுகளை உத்தர பிரதேச அரசு புண்படுத்துகிறது. பறை, கவர், சூத்திரன், விலங்கு, பெண், மொத்த தண்டனை அதிகாரி இதுவும் அதே சுந்தரகாண்டத்தின் ஒரு பகுதியாகும், அதை மாநில அரசு உச்சரிக்க முடிவு செய்துள்ளது.

சுந்தர காண்டம்

அதாவது சுந்தரகாண்டம் பாராயண திட்டத்தை ஏற்பாடு செய்தவற்கான அரசாங்கத்தின் முடிவு, பெண்களையும், சூத்திர சமூகத்தையும் துன்புறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் மற்றும் 97 சதவீத இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். இது 3  சதவீத மக்களை ஊக்குவிக்க போகிறது என பதிவு செய்து இருந்தார். இதனையடுத்து சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு மனநிலை சரியில்லை என்று அவரை  அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சுவாமி பிரசாத் மவுரியா, அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சுற்றுலா துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறியதாவது: சுவாமி பிரசாத் மவுரியாவின் மனநிலை சரியில்லை. அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்குமாறு அகிலேஷ் ஜிக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். எங்கேயும் நல்ல மருத்துவமனை கிடைக்காவிட்டால் எங்கள் ஆக்ரா பிரிவுக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கவும்.  மாநிலத்தில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் மற்றொரு மாநிலத்தின் அரசியல் தலைவர்களுடன் மூன்றாவது முன்னணியில் பணியாற்றும் முன் உத்தர பிரதேசத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.