நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது - ஜெய்ராம் ரமேஷ்

 
jairam ramesh

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஒரு சில முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவன் உள்ளிட்ட மசோதாக்கல் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Parliament

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்ய போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், சிறப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யப்போவதில்லை. முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். எனவே இந்த சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை நாங்கள் முன்வைப்போம். இவ்வாறு கூறினார்.