“கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார்”- மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்
கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார் என பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் 8 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு) கலந்திருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் 8 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திருப்பதி லட்டு விவகாரத்தில், கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார், புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சியின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, திருப்படி லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு இழுத்து விட்டுள்ளார், சந்திரபாபு நாயுடு மாபெரும் பொய்யர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அமைப்பு, அதன் விவகாரங்களில் அரசு ஓர் அளவுக்கு மேல் தலையிட முடியாது என கடிதத்தில் ஜெகன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.