தெலுங்கு தேசம் கட்சியினரால் ஆந்திராவில் வன்முறை- ஜெகன்மோகன் ரெட்டி

 
jagan mohan reddy

புதிய ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தெலுங்குதேசம் கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

Image

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரசு, தனியார் சொத்துகள் அழிக்கப்படுகின்றன. புதிய ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தெலுங்குதேசம் கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனை.

அரசு, தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள், சொத்துகளுக்கு தெலுங்குதேசம் கட்சியினர் சேதம் விளைவிப்பதால் ஆந்திரா ஆளுநர் தலையிட்டு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். தெலுங்குதேசம் கட்சியினரால் பாதிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.