ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா

 
ஜெகன் மோகன் ரெட்டி

இன்று மாலை 4 மணிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா செய்கிறார்.

பாஜகவிடம் கேட்கத்தான் முடியும்.. உத்தரவிடவெல்லாம் முடியாது.. ஜெகன் மோகன்  ரெட்டி | Jagan Mohan Reddy hopeful for the best from Modi - Tamil Oneindia

ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது  தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி.  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில்  சுமார் 160 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது.  அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை தோல்வியடைய செய்து,  மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், ஜெகன்மோகன் ராஜினாமா செய்யவுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநருக்கு அனுப்புகிறார்.