எனது தோல்வியில் பண பலம் முக்கிய பங்கு வகித்தது.. காங்கிரஸின் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு

 
ஜெகதீஷ் ஷெட்டர் 

ஹுப்பள்ளி-தார்வாட் சட்டப்பேரவை தொகுதியில் நான் தோற்றதில், பண பலம் முக்கிய பங்கு வகித்தது என்று அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பா.ஜ.க.காரான ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஹுப்பள்ளி-தார்வாட் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட்டார். லிங்காயத் சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவு வேறுவிதமாக அமைந்தது.

பணம்

ஹுப்பள்ளி-தார்வாட் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் தேன்காய் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடித்தார். தேர்தல் தோல்வி குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது தோல்வியில் பண பலம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணக் காரணி தற்போதைய காலத்தில் நிறைய மாறக்கூடும் மற்றும் கடந்த முறை தொடங்கிய போக்கை குறிப்பிட்டது. அதில் பா.ஜ.க.வால் வாக்காளர்களுக்கு ரூ.500-1,000 விநியோகம் செய்யப்பட்டது.

பா.ஜ.க.

பா.ஜ.க.வில் இருந்து நான் விலகியது, லிங்காயத் சமூகத்தின் அங்கீகாரம் மற்றும் நலனுக்கான ஒரு படி என்று தெரிவித்தார். மேலும், லிங்காயத் சமூகத்துக்கு பா.ஜ.க. போதுமான அளவு செய்யவில்லை என்று மறைமுகமாக கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்காததால் அக்கட்சியில் விலகினார். தனது எம்எல்ஏ பதவியையும் ஷெட்டர்  ராஜினாமா செய்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.