நாளை மறுநாள் திகாரில் சரண் - கெஜ்ரிவால்

 
Aravind

இடைக்கால ஜாமின் முடிந்து நாளை மறுநாள் திகார் சிறையில் சரணடைய உள்ளேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர்,  மே 10ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் மருத்துவ காரணங்களால் ஜாமின் நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.  இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிக்கப்பட்டது.

aravind

இதுதொடர்பாக பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ,  கடவுள் விரும்பினால் உங்களிடம் மீண்டும் வருவேன்.சென்ற முறை சிறையில் இருந்த போது எனக்கு சர்க்கரை அளவு அதிகரித்தது. அப்போது சிறை நிர்வாகம் எனக்கு மருந்து தர மறுத்தது. பாஜக அரசு எனக்கு பிணை கிடைக்க தடை ஏற்படுத்துகிறது. இந்த முறை என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. எனது உடல்நிலை சரியில்லாததால், குறைந்த எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. நான் இன்னமும் மன உறுதியுடன் உள்ளேன்.

Arvind kejriwal

மருத்துவர்கள் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தும் பாஜக அரசு ஜாமினை நீட்டிக்க மறுக்கிறது. ஆனாலும் நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து பாதுகாக்க சிறை செல்வதில் பெருமையே .சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களுக்கான பணிகள் ஒருபோதும் தடைபடாது. வெளியே வந்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்குவேன் என்றார்.