பூமி மற்றும் நிலாவை செல்ஃபி எடுத்த ஆதித்யா எல்-1 - புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ!
ஆதித்யா எல்-1 விண்கலம் பூமி, மற்றும் நிலாவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள நிலையில், அந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 02ம் தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. ஆதித்யா விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. 100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் பூமி, மற்றும் நிலாவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள நிலையில், அந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில், சூரியனை நோக்கி பயணம் செய்து வரும் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமி மற்றும் நிலாவை செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளது என பதிவிட்டுள்ளது.