திருப்பதி உண்டியலில் ஓர் ஆண்டு வசூல் இத்தனை ஆயிரம் கோடியா?

 
tirupati undiyal

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ம் ஆண்டு  2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.1,365 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

tirupati


திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  2024 ஆம் ஆண்டில் 2.55 கோடிக்கும்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தங்களின் வேண்டுதலின்படி ரூ.1365 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர். சுமார் 99 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிட்-19 தொற்றுநோய் தளர்வுக்கு பிறகு  தினமும் உண்டி காணிக்கை  வசூல் தொடர்ந்து ரூ.3 கோடியைத் தாண்டி பக்தர்கள் செலுத்துகின்றனர்.  அவ்வாறு உண்டி மூலம் தினசரி சராசரி வருமானம் வார நாட்களில் ரூ.3.6 கோடியாகவும், வார இறுதி நாட்களில் ரூ3.85 கோடியாகவும் உள்ளது. டிசம்பர் 31-ம் தேதி உண்டி வருமானம் ரூ.4.10 கோடி கிடைத்தது. 

புத்தாண்டின் ஜனவரி 1 ம் தேதி 69 ஆயிரத்து 630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.3.13 கோடி காணிக்கை செலுத்தினர். 18, 965 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிட் முன்பு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தினசரி  சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை  70,000 ஆக குறைந்தாலும் கோயிலின் உண்டியல் வருமானம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.1,200 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.