‘சித்தராமையா கர்நாடகாவின் அடுத்த முதல்வரா?’ - அவர் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..

 
 ‘சித்தராமையா கர்நாடகாவின் அடுத்த முதல்வரா?’ -  அவர் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?' என்று அரசியல் வட்டாரங்கள் மத்தியில் கேள்வி  எழுந்து வரும் நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 2வது முறையாக முதல்வராகிறார்” என அவர் வீட்டின் முன்பு பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு  கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ்,  ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று ( மே 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதியில் 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.  ஆளும் பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை சந்தித்தது.  ஜனதா  தளம் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  

 ‘சித்தராமையா கர்நாடகாவின் அடுத்த முதல்வரா?’ -  அவர் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..

அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி இந்த வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. ந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,  எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.  எம்.எல்.ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா வீட்டின் முன்பு, அவர்தான் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது.  அதில் “காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 2வது முறையாக முதல்வராகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பேனரால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.