சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை

 
சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை

விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Image

ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு   செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 317 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றப் புலனாய் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் நந்தியலாவில் அவரை குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்ததை கண்டித்து  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு சந்திரபாபு நாயுடுவை அழைத்துவந்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடத்திவருகின்றனர். விசாரிக்க 20 கேள்விகளை தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஆந்திராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெலுங்கு தேசம் கட்சி அறிவித்து இருக்கிறது.