"தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும்" - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

 
central

தற்காலிக சிகிச்சை மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

corona patient

இந்தியாவில் கொரோனா  பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் தொற்று ஆகியவை வேகமாக பரவி வருகின்றன.  நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 775 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அத்துடன் நேற்று இந்தியாவில் ஆயிரத்து 431 பேர் ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியில் 351 பேருக்கும் ,தமிழ்நாட்டில் 118 பேருக்கும் ,குஜராத்தில் 115 பேருக்கும் , கேரளாவில் 109 பேருக்கும் என மொத்தம் 23 மாநிலங்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் ஒட்டுமொத்தமாக 488பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

corona

இந்நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்காலிக மருத்துவமனைகளை  ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய  அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளிகளைக் கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைக்கமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தாமதிக்காமல் கொரோனா பரவலை தடுக்க உடனடியாக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.